தானாக பகிர்வை உருவாக்கல்

தானாக பகிர்வை உருவாக்கும் போது உங்கள் கனினியில் இருந்து நீக்கப்பட்ட தகவல்களை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

லினக்ஸ் பகிர்வுகளை மட்டும் நீக்க (முன்பு நிறுவப்பட்ட லினக்ஸால் உருவான பகிர்வுகள்), அனைத்து லினக்ஸ் பகிர்வுகளையும் நீக்கு என்பதை தேர்வு செய்யவும்.

வன் இயக்கியில் உள்ள அனைத்து பகிர்வுகளையும் நீக்க (விண்டோஸ் 95/98/NT/2000 போன்ற மற்ற இயங்குதளம் உருவாக்கிய பகிர்வுகளும் இதில் அடங்கும்) இந்த கணிணியில் உள்ள எல்லா பகிர்வுகளையிம் நீக்கு என்பதை தேர்வு செய்யவும்.

உங்கள் கணினியில் தற்போதுள்ள தகவல்கள் மற்றும் பகிர்வுகளை அப்படியே வைத்துக்கொள்ள போதுமான இடம் இருந்தால், எல்லா பகிர்வுகளையும் அப்படியே வைத்துக்கொண்டு காலி இடத்தில் பகிர்வை உருவாக்கு என்பதை தேர்வு செய்யவும்.

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வன்தகடு இருந்தால் மென்பொருள் நிறுவ விரும்பும் வன்தகட்டை சுட்டியை பயன்படுத்தி தேர்வு செய்யவும். தேர்வு செய்யப்படாத வன்தகட்டில் உள்ள தகவல்கள் அப்படியே பாதுகாக்கப்படும்.

மீள்பார்வை தேர்வை தேர்வு செய்வதால் உருவாக்கப்பட்ட பகிர்வில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும்.

அடுத்துஎன்பதை தேர்வு செய்து தொடரவும்.